Friday, September 17, 2010

கவிதையோடு காதலும்

கவிதை

நான் துரோகி
அந்த கடைசி பார்வை
என்னால் எப்போதும் மறக்கமுடியாது

ஏர் உழ
இரவலாக செல்கிறோம்
என்ற ஏக்கபார்வையா?

குளிப்பாட்ட நீயில்லாமல்
யார் இது?
என்ற பார்வையா...

எனக்கு அந்த கடைசி பார்வையின்
அர்த்தம் புரியவில்லை...

ஏக்கமான
அந்த விழிகள்...

செல்லமாய் முட்ட வரும்
அந்த செல்ல பாய்ச்சல்...

குனிந்து தவிடு கிளர்கையில்
பாறை நாக்கால் நக்கி வைக்கும்
அந்த குறும்பு...
இனி நான் காணப்போவதில்லை...

ஒரே ஒரு சென்னை பயணத்திற்காக
ஓட்டிக்கொண்டு போய்விட்டான்...
நான் துரோகம் செய்துவிட்டேன்...